
சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் சாய் பல்லவிக்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இதையும் படிக்க: படத்தின் வெற்றி ஒரு வாரம்தான் ஆனால்... : இயக்குநர் நெல்சன் கூறிய தத்துவம்!
இந்நிலையில் படத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தயாரிப்பு நிறுவனம் அந்த படங்களுக்கு காப்புரிமை கோரி நீக்கிவிட்டதாக ட்விட்டரில் சினிமா டிரேட் அனலிஸ்ட் ஒருவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ரன்வீர் சிங்-ஆலியா பட் திரைப்படம்: ரூ.250 கோடி வசூல்!
ஏற்கனவே மாவீரன் இசை வெளியீட்டு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் நல்ல உடற்கட்டுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைக்கு குல்லா அணிந்திருப்பார். எனவே ‘எஸ்கே 21’ படத்தில் புதிய தோற்றம் நிச்சயம் என அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷிவ ராஜ்குமார்!
தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் ஆக.15ஆம் நாளன்று அதிகாரபூர்வமாக வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...