மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்குகிறார். 

இப்படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், கொளதம் கார்த்திக், அனகா  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

திபு நினன் தாமஸ் இசையக்க தன்வீர் மிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு கட்டங்களாக நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு துவக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் வெளியாகும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com