நாகார்ஜுனாவின் 99வது படம் அறிவிப்பு! (விடியோ)

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் 99வது படம் குறித்த அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. 
நாகார்ஜுனாவின் 99வது படம் அறிவிப்பு! (விடியோ)

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்களில் நாகார்ஜுனாவும் ஒருவர். முதல் படம் 1986இல் வெளியானது. 90களில் பிரபல நடிகை அமலாவை திருமணம் செய்தவரும் இவர்தான். நடிகர் நாக சைதன்யா இவரது மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் நாகார்ஜுனா நடித்த ரட்சகன் படம் பெரும் வெற்றி பெற்றது. கார்த்தியுடன் நடித்த தோழா திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியிலும் பல படங்கள் நடித்துள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை இயக்கியுள்ளார்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரின் பேனரில் தயாராகும் நாகர்ஜுனாவின் 99வது படத்திற்கு ‘நா சாமி ரங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராகவும் கதை, வசனம் எழுதியுள்ளார் பிரசன்ன குமார் பெஜவாடா. படத்தை இயக்கியுள்ளார் விஜய் பின்னி. 

இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா பிறந்தநாளினை முன்னிட்டு இந்தப் படத்தின் அறிவிப்பு விடியோவினை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டு சங்கராந்திக்கு படம் வெளியாகுமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com