கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரசிகர்களின் பாராட்டில் ஃபைட் கிளப் டீசர்!

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடித்துள்ள 'ஃபைட் கிளப்' படத்தின் டீசர் கவனம் பெற்று வருகிறது.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 10:06 am

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். 

உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் 'ஃபைட் கிளப்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், கடந்த டிச.2 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்'  படத்தின் டீசரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் டீசரின் இறுதியில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இளையராஜாவின் ’என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலின் பின்னணி இசையை அடிதடி காட்சிகளுடன் சேர்த்திருந்தது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

டீசர் மூலம் யூடியூப்பில் 3.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.