சென்னையில் தரவு மையம் திறப்பு! முதல்வர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் பங்கேற்பு!தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள்: நயன்தாரா 

நடிகை  நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாமென கூறியுள்ளார். 

Updated On :

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது. 

Story image

இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அன்னபூரணி படம் (டிச.1) சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. 

சமீபத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு, நடிகர் விஜய் லியோ வெற்றி விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் குறித்து பேசியுள்ளதால் மீண்டும் விவாததுக்குள்ளாகி வருகிறது. அவரது ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

Story image

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பட்டத்துக்கு நடிகை மாளவிகா, “லேடி என்பதை எடுத்து விடலாம். பாலின சமத்துவமாக அனைவரையும் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாம்” எனக் கூறியிருந்தார். பின்னர் இவர் நயன்தாராவை குறிப்பிட்டு பேசுகிறார் என விமர்சனம் வரவே, “நான் பொதுவாக சொன்னது. மூத்த நடிகையாக அவர் மீது மரியாதை இருக்கிறது” எனக் கூறியிருந்தார். 

அன்னபூரணி படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் நடிகை நயன்தாரா, “லேடி சூப்பர் ஸ்டார் என 10 பேர் பாராட்டினால் 50 பேர் திட்டுவார்கள். அதனால் இயக்குநரிடம் என்னுடைய பெயர் மட்டும் போதுமென்று கூறினேன். என்னுடைய நோக்கம் அதை நோக்கி கிடையாது  நான் என்ன மாதிரியான ஸ்கிரிப்டினை தேர்வு செய்ய வேண்டும், என்ன மாதிரியானை கதைகளை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்பதை அந்த டேக் லைன் (சூப்பர் ஸ்டார் ) வைத்து முடிவுசெய்ய முடியாது. அது மக்கள் கொடுத்த அன்பு” எனக் கூறியுள்ளார். 

மேலும், “எனக்கு பெயர், புகழ், பணம் என எல்லாமே இந்த சினிமாவில்தான் கிடைத்தது. அதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். ” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.