சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 13 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

இன்றைய செய்திகள் ஜூலை 13 -  நேரலை

சின்னர்.

Updated On :13 ஜூலை 2026, 11:45 am IST
6:15 am, 13 ஜூலை 2026

மு.க. ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் பூமணியின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6:08 am, 13 ஜூலை 2026

எ.வ. வேலு வழக்கு

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

5:27 am, 13 ஜூலை 2026

தீ விபத்து

பாங்காக்கில் உள்ள மதுக்கூடத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5:27 am, 13 ஜூலை 2026

பறவை மோதியது

லண்டனிலிருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மீது இன்று அதிகாலை பறவை மோதியது.

5:26 am, 13 ஜூலை 2026

7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 7,754 பக்தர்களைக் கொண்ட 12வது குழு பகவதி நகர் முகாமிலிருந்து புறப்பட்டுள்ளது.

5:26 am, 13 ஜூலை 2026

தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.

5:26 am, 13 ஜூலை 2026

2015-ஆம் ஆண்டுக்குப் பின்.. மிக வெப்பமான ஜூலை மாதம்!

தமிழ்நாட்டில், வழக்கமான ஜூன் மாதம் பருவமழை தொடங்கியதும், வெய்யில் தன்னுடைய வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களும் வெய்யில் காலமாகவே மாறிவிட்டது.

5:07 am, 13 ஜூலை 2026

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 13)

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

5:06 am, 13 ஜூலை 2026

எழுத்தாளர் பூமணி காலமானார்

சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும் 'அசுரன்' திரைப்பட கதாசிரியருமான மூத்த எழுத்தாளர் பூமணி காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.