ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒரே நாளில் மோகன் லாலுடன் புகைப்படம் எடுத்த 6000 ரசிகர்கள்!

கேரளத்தைச் சேர்ந்த பல ரசிகர்கள் நடிகர் மோகன் லாலைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

News image
Updated On :20 டிசம்பர் 2023, 6:58 am

DIN

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன் லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 12த் மேன், அலோன் உள்ளிட்ட படங்கள் கவனத்தைப் பெற்றன. 

விரைவில், ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடித்த நேரு படம் திரைக்கு வருகிறது. மேலும், இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன் படமும் அடுத்தாண்டு வெளியாகிறது.

இந்நிலையில், நடிகர் மோகன் லாலின் ரசிகர் மன்றத்தைத் துவங்கி 25 ஆண்டுகள் முடிவடைந்ததால் கொச்சியில் தன் ரசிகர்களை அவர் சந்தித்தார். கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அனைவருடனும் நின்றபடி புகைப்படம் எடுக்க மோகன் லால் ஒத்துழைத்திருக்கிறார். 

தன் தீவிர ரசிகரான மணிகுட்டனுடன் மோகன் லால்!

தன் தீவிர ரசிகரான மணிகுட்டனுடன் மோகன் லால்!

சலிக்காமல் தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த மோகன் லாலின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.