மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இறுதிக்கட்டத்தில் மிஸ்டர் மனைவி தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.

இத்தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.  இந்தத்  தொடரில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார். 

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என நிணைக்கும்  ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் கதையாகும். 

இந்த நிலையில், மிஸ்டர் மனைவி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் டிஆர்பி குறைந்துள்ளதால் இத்தொடரை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இத்தொடரின், இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா, செம்பருத்தி தொடரில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.