பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

'பரியேறும் பெருமாள்' பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராசு உடல் நலக் குறைவால் இன்று (பிப். 3) காலை காலமானார்.

News image
Updated On :3 பிப்ரவரி 2023, 7:03 am

DIN

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக் குறைவால் இன்று (பிப். 3) காலை காலமானார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு 'பரியேறும் பெருமாள்' வெளியானது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனின் தந்தையாக நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார்.

நிஜத்தில் நாட்டுப்புறக் கலைஞரான இவர், 'பரியேறும் பெருமாள்' படத்திலும் தெருக்கூத்து கலைஞரான நடித்திருந்தார். படத்தில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. 

தங்கராஜ் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு மின்சார வசதியில்லாத வீட்டில் வசித்து வந்தார். 'பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை தங்கராஜ் இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு கலைஞர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.