
2018இல் இரும்புத்திரை படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் பி.எஸ்.மித்ரன். 2019இல் வெளியான ‘ஹீரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அடுத்து கார்த்தியுடன் எடுத்த சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் உடற்பயிற்சி விடியோ!
சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது.
படத்தின் அபார வசூல் வெற்றியால் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் லான்சன் காரைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தனது காதலி ஆஷாமீரா ஐயப்பன் அவர்களை தஞ்சாவூரில் குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மணமுடித்துள்ளார். சினிமா பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ’குலு குலு’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார், 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
புகைப்படத்தினைப் பதிவிட்டு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.