அனுஷ்காவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அனுஷ்காவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சிங்கம், வானம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

முக்கியமாக, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் பெரிதாக பிரபலமடைந்தார்.

ஆனால், இஞ்சி இடுப்பழகி என்கிற படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை அதிகரித்து நடித்தார். அப்படம் தோல்வியடைந்தது. அதன்பின், அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால், பல பட வாய்ப்புகளையும் இழந்தார். 

இந்நிலையில், அதிக உடல் எடையுடன் வயதான தோற்றத்தில் அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதனைக் கண்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com