விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசைப் பணிகளை தொடங்கியுள்ளதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு மனம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து. ஆனால் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.
இதற்கிடையே இயக்குநர் கௌதம் மேனன் ஜோஷ்வா, வெந்து தணிந்தது காடு படங்களிலும், விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களிலும் பணியாற்றி வந்தனர்.
சில நாள்களுக்கு முன்பு, துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் முடிவுபெறும் சூழலில் இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கெளதம் வாசுதேவ் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | உடல்.. பொருள்.. ஆவி..’ நண்பகல் நேரத்து மயக்கம் - திரைவிமர்சனம்
இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசைப் பணிகளை தொடங்கியுள்ளதாக ஹாரிஸ் ஜெயராஜ் இன்று ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து ஹாரிஸ் வெளியிட்ட பதிவில், கெளதம் வாசுதேவின் துருவ நட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இந்த பதிவு விக்ரம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

