'கண்ணான கண்ணே' தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு! விடியோ வெளியிட்ட நாயகன்!

'கண்ணான கண்ணே' தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு! விடியோ வெளியிட்ட நாயகன்!

படப்பிடிப்பு முடிந்து 'கண்ணான கண்ணே' குழுவினர் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த விடியோ இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 
Published on

'கண்ணான கண்ணே' தொடர் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அந்தத் தொடரின் படப்பிடிப்பு இறுதி நாள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' தொடர் அதிக அளவிலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

அப்பாவின் பாசத்துக்காக ஏங்கும் மகள், அப்பாவின் பாசத்தைப் பெறவும் அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் என்னென்ன சவால்களை சந்திக்கிறாள் என்பதே 'கண்ணான கண்ணே' தொடரின் மூலக்கதை.

இதில் பப்ளூ பிரித்விராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். நிமிஷிதா, ராகுல் ரவி இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. 

இந்தத்தொடருக்கு மகேந்தர், பாரதி கண்ணன் கதை எழுதுகின்றனர். நரசிம்ம மூர்த்தி, நல்லம் ஆகியோர் வசனம் எழுத தனுஷ் இயக்குகிறார்.

இந்தத் தொடர் வரும் 4ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதனை பப்ளூ பிரித்விராஜ் விடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் இயக்குநர் தனுஷ், நாயகி நிமிஷிதா உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகளையும் பிரிவையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

மேலும், படப்பிடிப்பு முடிந்து 'கண்ணான கண்ணே' குழுவினர் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த விடியோ இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com