
நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேஷ் பாபு, புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஒரு விடியோவை பகிர்ந்திருக்கும் நடிகர் நரேஷ் பாபு, புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகரும் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபு, நடிகை பவித்ரா லோகேஷை காதலித்து வந்தார். இவர்களது காதல் பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், ஒரு வழியாக இவர்களது காதல் திருமணத்தில் நிறைவடையவிருக்கிறது.
தமிழில் கௌரவம், அயோக்யா, வீட்ல விசேஷம் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் நரேஷ் பாபுவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நரேஷ், தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி, இரண்டு மனைவிகளை விவகாரத்து செய்து, மூன்றாவது மனைவியிடம் விவகாரத்துக் கோரியிருக்கிறார்.
பவித்ராவுக்கும் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவகாரத்தானவர். இவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.