
வலைப்பேச்சு யூடியூபில் பிரபலமானவர் ஜே. பிம்ஸி. இவர் பத்திரிகையாளர், திரைப்பட விமர்சகர் என்றும் அறியப்படுகிறார். இவர் சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளானது.
அந்த நேர்காணலில், “ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவர் இப்போது முன்னாள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நடிகர் விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார். தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியதில் எந்த தவறும் இல்லை. விநியோகஸ்தர்கள்கூட இதை ஏற்றுக் கொள்வார்கள்” என கூறியிருந்தார்.
இதனால் ஆவேசமடைந்த ரஜினி ரசிகர்கள் பிஸ்மியை சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இது குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
வாரிசு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய்தான் நம்பர்.1 என சமீபத்தில் தெரிவித்ததும் சர்ச்சையானது. பின்னர் நடிகர் சரத்குமாரும் இதே கருத்தை முன்வைத்தார்.
இந்நிலையில், சீமான் இது குறித்து திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா? என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் எனும் உயரிய இடம் யாருக்கும் நிரந்தரமானதில்லை. காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். முதலில் தியாகராஜ பாகவதர் இருந்தார். அடுத்து எம்.ஜி.ஆர். அடுத்து ரஜினி. தற்போது உச்சத்தில் இருப்பது நடிகர் விஜய்தான். இந்த கருத்தைக் கூறியதற்காக பத்திரிக்கையாளர் பிஸ்மியை மிரட்டும் வகையில் அவரது அலுவலகத்திற்கு சென்ற ரஜினி ரசிகர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...