சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசு வழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகியது.
வாடகை தாய் சட்டத்தில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில் விசாரணை மேற்கொண்டு சட்டத்தின்படி தான் குழந்தை பெற்றதாக அரசு தெரிவித்தது.
இரட்டைக் குழந்தைகள் பிறந்து முதல் புத்தாண்டை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்தாண்டு கொண்டாடியுள்ளனர். இரட்டைக் குழந்தைகளுடன் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் கேஸ் இணைப்பு: பிரதமர் மோடி

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
சட்டென்று மாறுது வானிலை பாடல் வெளியீடு!
வீடியோக்கள்

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

