
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: காந்தாரா 100வது நாள்: ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சி ட்வீட்!
சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமாரின் தோற்ற புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்தப் படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரம் முத்துவேல் பாண்டியன்.
விருவிருப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது. ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: வாரிசு, துணிவு: முதல் நாள் முதல் காட்சி பற்றிய அப்டேட்!
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை (ஜன.8) சென்னையில் தொடங்கி இரண்டு நாள்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...