400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் காய்ச்சல்! 

நடிகை ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவியின் படப் புரமோஷனில் கலந்து கொள்ளாதது ஏனென விளக்கமளித்துள்ளார். 

News image
Updated On :9 ஜனவரி 2023, 7:42 pm IST

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருந்தார். 

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

தற்போது பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாகும் இரண்டு பெரிய படங்களில் ஸ்ருதி ஹாசன்தான் கதாநாயகி. பாலகிருஷ்ணாவுடன் ‘வீர சிம்ஹ ரெட்டி’, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘வால்டர் வீரய்யா’ படத்திலும் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவி படத்தின் புரமோஷனில் கலந்துக் கொள்ளவில்லை. இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். 

Story image

கடந்தாண்டு ஜூலை மாத்ததில் தனது சமூக வலதளப் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவைப் பகிர்ந்து பிசிஒஎஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கினர். இந்நிலையில் மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். 

Story image

ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். நேற்றைய தினத்தின் அன்புக்கு அனைவருக்கும் நன்றி. இருந்தும் என்னால் மிகப்பெரிய வெளியீட்டு விழாவிற்கு வர முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. ரெஸ்ட் எடுத்து வருகிறேன். விரைவில் குணமடைந்துவிடுவேன். ரசம் மட்டுமே அதிகமாக சாப்பிடுகிறேன்” என பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.