‘வலிமை படம் தோல்விக்கு இதுதான் காரணம்...’-இயக்குநரின் அதிரடி பதில்! 

அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை படத்தின் தோல்விக்கு இயக்குநர் வினோத் கூறிய பதில் இதுதான். 
‘வலிமை படம் தோல்விக்கு இதுதான் காரணம்...’-இயக்குநரின் அதிரடி பதில்! 
Published on
Updated on
1 min read

அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் 2022இல் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தது. சிறிது நாளில் படத்தின் நீளம் குறைக்கப்பட்டு வெளியானது. ஆனாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தக்  கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.  திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் முதல்நாள் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் வினோத் வலிமை படம் சரியாக போகாததிற்கு காரணத்தை தெரிவித்துள்ளார். இதில் ஹெச்.வினோத் கூறியதாவது: 

ரசிகர்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் கேட்டார்கள். ஒரு படத்திற்கு 5 அல்லது 6 அப்டேட்டுகள்தான் விட முடியும். அதற்கு மேலும் விட வேண்டுமென்றால் படத்திலிருந்து கட் செய்துதான் விட வேண்டும். வலிமை படத்திற்கு இப்படித்தான் நடந்தது. படத்திலிருந்து எல்லாவற்றையும் வெளியாகும் முன்பே சொல்லிவிட்டால் படம் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது. ரசிகர்கள் ஆர்வத்தில் அப்டேட் கேட்கிறார்கள். அதற்காக அப்டேட் விடமுடியாது. அதனால்தான் இந்தப் படத்திற்கு அப்படி செய்யவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.