நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.
இதையும் படிக்க: வாரிசு, துணிவு: முதல் நாள் முதல் காட்சி பற்றிய அப்டேட்!
துணிவு படத்தின் டிரைலர் 56 மில்லியன் (5.6 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது. மேலும் திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரைய்ரங்குகளில் வெளியாகும். மேலும் முதல்நாள் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் வினோத் ஒரு நேர்காணலில், “முதல் பாதி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காகவும் இரண்டாம் பாதி திரைப்படம் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கும்” என கூறியுள்ளார். இதன்மூலம் படம் இளைஞர்களுக்கு மட்டுமின்றி குடும்பங்களுக்கும் பிடிக்கும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ரஜினியுடன் மோகன்லாலின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
காந்தாரா 100வது நாள்: ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சி ட்வீட்!
'பிக்பாஸ்' சலிப்பு...? 'குக் வித் கோமாளி'க்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
பொம்மை நாயகி: முதல் பாடலில் பாசமான தந்தை, அன்பான கணவராக யோகிபாபு அசத்தல்!
விஜய் டிவி நிகழ்ச்சிக்கு மீண்டும் வரும் ஜி.பி. முத்து!