நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டிற்கு தனது மனைவி சங்கீதாவை அழைத்து வராததால் இருவருக்கும் பிரச்னை உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது.
விஜய் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் முடித்து 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
மேலும், இயக்குநர் அட்லீயின் மனைவி வலைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால் சங்கீதாவுடன் பிரச்னையா என சமூகவலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. மேலும் விக்கிபீடியாவில் சங்கீதாவுடன் விவாகரத்து ஆனதாக மாற்றப்பட்டதால் இந்த விவகாரம் பெரிதானது.
இந்நிலையில், விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது மகன் மற்றும் மகளுடன் அமெரிக்காவில் இருப்பதாக இருப்பதாக தகவல்களை தெரிவித்தனர். பின்னர் விக்கிபீடியா பக்கத்தில் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி காலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.