தமிழ் சினிமாவில் யார் நம்.1 என்கிற கேள்விக்கு தயாரிப்பாளர் போனி கபூர் பதிலளித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நாளை(ஜன.11) வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முன்னதாக வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இது வியாபாரம். நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
அதன்பின், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாரிசு படத்தை வெளியிட முன்வந்தது.
இதையும் படிக்க: சூர்யா நடிப்பில் ‘காக்க காக்க 2’?
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் ‘யார் நம்பர்.1? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, அவர் ‘இந்த எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கதைதான் நம்பர்.1. சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதற்கு அதன் கருதான் காரணம். அதுதான் உண்மையான நம்.1.” என்றார்.
துணிவு படம் எப்படியிருக்கிறது? என்கிற கேள்விக்கு, ‘நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். முன்பே வில்லன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தாலும் இதில் மேலும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. இது ரசிக்கப்படும்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்கள் அகற்றம்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய நுட்பம்

நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டது: மாணிக்கம் தாகூா்

எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கைக் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



