உண்மைக் கதையில் நடிக்கும் ரம்யா பாண்டியன்- ஆரவ்!

நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் ஆரவ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 
உண்மைக் கதையில் நடிக்கும் ரம்யா பாண்டியன்- ஆரவ்!
Published on
Updated on
1 min read

பிக்பாஸ்-1 மூலம் பிரபலமானவர் ஆரவ். அவரது முதல் படம் மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் சரண் இயக்கத்தில் வெளியானது. 

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். இந்தத் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விமஎசன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் வில்லனாக நடித்த ஆரவ்வின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. 

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். 

தற்போது இருவரும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். தேன் படத்தினை இயக்கிய கணேஷ் விநாயகம் இயக்கும் புதிய படத்தில் 12வயது சிறுமிக்கு தந்தையாக ஆரவ் நடிக்க உள்ளார். இவருக்கு மனைவியாக ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளார். 1996இல் நடந்த மலைவாழ் மக்களுக்கும் நிலத்தில் வசிப்பவர்களுக்கும் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

குழந்தையாக பேபி க்ரித்திகா நடித்துள்ளார். தந்தைக்கும் மகளுக்குமான படமாக முழுக்க முழுக்க எமோஷனலாக இருக்கும் எனவும், ரம்யா பாண்டியன் கதாபாத்திரம் சுவாரசியமாக இருக்குமென இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

கணேஷ் இயக்கிய தேன் திரைப்படம் 2020 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோரமா செக்‌ஷனில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com