கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காஷ்மீர் செல்லும் ‘விஜய் 67’ படக்குழு

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘விஜய் 67’ படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2023, 12:12 pm

DIN

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘விஜய் 67’ படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

லோகேஷ் - விஜய்யின் முதல் படமான மாஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க பான் இந்தியா ஆக்‌ஷன் படமாக உருவாகிறது விஜய் 67.

இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான்,  சஞ்சய் தத் எனப் பலர் நடிக்கவுள்ளனர்.

மேலும், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கொடைக்கானல் செல்ல உள்ளதாகவும் அதன்பின் காஷ்மீர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.