பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சொந்தமான நிலத்திற்கு வரி செலுத்தாததால் வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1997ஆம் ஆண்டு தமிழிலில் முதல்முறையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமடைந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்தாண்டு மணிரத்தனம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டார் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக நில வரி செலுத்தாததை தொடர்ந்து, நாசிக் மாவட்ட வருவாய்த்துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிக்க | நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்!
அந்த நோட்டீஸில் 10 நாள்களுக்குள் நில வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அப்பகுதியில் நில வரி செலுத்தாத 200-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை
தேர்தல் விதிமீறல்! மதுரை ஆட்சியர், ஆணையரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு!

தன்வி சா்மா அசத்தல் வெற்றி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

