பணத்திற்காக நடிப்பதில் என்ன தவறு?: பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பணத்திற்காக நடிப்பதில் என்ன தவறு?: பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்துள்ள ருத்ரன், எஸ்.ஜே.சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. மேலும் சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துவருகிறார்.  

இந்நிலையில், சமீபத்தில் பிரியா பவானி சங்கர், ‘நான் பணத்திற்காகத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன்’ எனக் கூறியிருந்தார். இதனால், சில விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது, இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரியா பவானி சங்கர், ‘நான் சொன்னதாக பரவும் செய்திகள் பொய்யானவை. அப்படி நான் சொன்னதாக இருந்தாலும் அதில் என்ன தவறு? எல்லாரும் பணத்திற்காகத் தானே நடிக்கிறார்கள். நானும் அதற்காக நடிப்பதில் தவறில்லையே. என்னுடைய வாழ்வில் யாரும் தலையிட நான் விரும்பமாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com