தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விஜய் டிவியை புறக்கணியுங்கள்! டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களில் அசீம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விக்ரம், சிவினுக்கு ஆதரவாக எழுந்த பதிவுகளில், விஜய் தொலைக்காட்சியை புறக்கணியுங்கள் எனப் பதிவிடப்பட்டு வருகிறது.

Published On :

விஜய் தொலைக்காட்சியை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களில் அசீம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விக்ரம், சிவினுக்கு ஆதரவாக எழுந்த பதிவுகளில், விஜய் தொலைக்காட்சியை புறக்கணியுங்கள் எனப் பதிவிடப்பட்டு வருகிறது. 
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் இறுதிக்கட்டதை எட்டியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர்களாக அஷீம், விக்ரம், சிவின் ஆகியோர் இருந்தனர். இதில், வெற்றியை அறிவிக்கும் மேடைக்கு அஷீம் மற்றும் விக்ரம் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் இருவருக்குமே ரசிகர்கள் குவிந்துள்ளனர். எனினும், சக போட்டியாளர்களை கோபத்தில் கடுமையாக பேசியதால், அஷீம் பலமுறை கமல்ஹாசனால் கண்டிக்கப்பட்டுள்ளார். 

Story image

அதேவேளையில், விக்ரம் தன்னுடைய நிதானத்தால் பலரின் மனங்களைக் கவர்ந்தவராக அறியப்படுகிறார். 

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அஷீம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராகவும், விஜய் தொலைக்காட்சிக்கு எதிராகவும் பலர் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

Story image

அந்தவகையில், அப்யூஸர் அஷீம், பாய்காட் விஜய்டிவி என்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகளைக் குறிப்பிட்டு அஷீம், விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.