திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இதுதான் கைதி ரீமேக்கா? விமர்சிக்கப்படும் ’போலா’

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ படத்தை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

News image
Updated On :24 ஜனவரி 2023, 7:17 am

DIN

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ படத்தை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை கைதி திரைப்படம் பதிவு செய்தது. 

இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ’போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் கைதி படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்க  அஜய் தேவ்கன் இயக்கியுள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த இப்படத்தின் 2வது டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கைதி திரைப்படம் ஒரே இரவில் நடப்பதுபோல் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், போலாவில்  பகல் காட்சிகள், பைக் ஸ்டண்ட், மோசமான விஎஃப்எக்ஸ் மற்றும் மத ரீதியான காட்சிகள் என கைதியில் இடம்பெறாத பல காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால்,  கைதி ரீமேக் தரத்தை அஜய் தேவ்கன் கெடுத்துவிட்டதாக இணையத்தில் ‘போலா’ படத்தை பலர் விமர்சித்து வருகின்றனர். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.