
தனது காரின் மேற்கூறையில் அமர்ந்து பயணித்து சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தினார் பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண். ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது மார்ச் 2014இல் பவன் கல்யாணால் உருவாக்கப்பட்டது.
2022இல் பீம்லா நாயக் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ஹர ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் ஆகிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார்.
இதையும் படிக்க: ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து!
சாய் தரம் தேஜூடன் பவன் கல்யாண் நடித்துள்ள ப்ரோ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் - 50 புதிய அப்டேட்
இந்நிலையில், ட்விட்டரில் 5.3 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ள பவன் கல்யாண் தற்போது இன்ஸ்டாகிராமிலும் நுழைந்துள்ளார். அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் பவன் கல்யாணை பின் தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் சேர்ந்தது ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பினை ஏற்படுத்தியது. குறைந்த மனி நேரத்தில் அதிகமான ஃபாலோயர்ஸ்களை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...