
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தமன்னாவின் நடனத்தில் உருவாகும் இப்பாடல் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்று இந்தியா முழுவதும் ஒலித்த ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்துவதாகவும் நிச்சயம் ‘காவாலா’ ஏமாற்றாது என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ நாளை (ஜூலை 6) மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Konjam Dance #Kaavaalaa? #JailerFirstSingle drops Tomorrow @ 6 PM @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer pic.twitter.com/OHyqakwKVN
— Sun Pictures (@sunpictures) July 5, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...