மாவீரன் - சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர்!
மாவீரன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர் ஒருவர் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இப்படம் கண்டிப்பாக தனக்கு வெற்றிப்படமாக அமையும் என நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார்.
இதையும் படிக்க: கேஜிஎஃப் தரத்தில் கேப்டன் மில்லர்!
இந்நிலையில், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில், இது நடிகர் ரஜினியாக இருக்கும் என பலர் சமூக வலைதளங்களில் கருத்திட்டு வந்தனர்.
ஆனால், அவர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், ஒரு பிரபலம் இருக்கிறார். இது யாராக இருக்கும் என்கிற ரகசியத்தை சிரத்தையுடன் காப்பாற்றி வருகின்றனர் படக்குழுவினர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...