
மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது, சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மாவீரன் படத்தின் விடியோ பாடல் வெளியானது!
இதனிடையே, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...