
ராஞ்சனா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி தன் அடுத்த பாலிவுட் படம் குறித்து தனுஷ் அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ராஞ்சனா. இதுதான் தனுஷ் நடிப்பில் வெளியான முதல் பாலிவுட் படம்.
தமிழில் ’அம்பிகாபதி’ என்கிற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ரஜினியுடன் நடிக்கும் யாஷ்?
இந்நிலையில், இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில், “சில படங்கள் நம் வாழ்வை மாற்றக்கூடியவை. ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். தற்போது, இப்படம் 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி இதே கதையுலகத்துடன் தொடர்புடைய ’தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடிக்கிறேன். இந்தப் பயணம் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், நமக்கு ஒரு சாகசமாக இருக்கும்.” எனத் பதிவிட்டுள்ளார்.
ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய்யே இப்படத்தையும் இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.