ரஹ்மான் படத்தில் பாடியதால் இளையராஜா என்னை பாட அழைக்கவில்லை: பாடகி மின்மினி அதிர்ச்சி தகவல்! 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் படத்தில் பாடல் பாடியதால் இளையராஜா தன்னை அவர் படங்களில் பாட அழைப்பதை நிறுத்திக் கொண்டார் என பாடகி மின்மினி கூறியுள்ளார். 
ரஹ்மான் படத்தில் பாடியதால் இளையராஜா என்னை பாட அழைக்கவில்லை: பாடகி மின்மினி அதிர்ச்சி தகவல்! 
Published on
Updated on
1 min read

1992இல் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகி மின்மினி. 30 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இந்தப் பாடல் மீதான பிரமிப்பு குறையவில்லை. ரஹ்மான் படத்தில் பாடிய பிறகு இளையராஜா தனக்கு வாய்ப்பு வழங்கவில்லையென கூறியுள்ளார். 

பாடகி மின்மினி தமிழில் ராஜா இசையில் அறிமுகமானவர். ரஹ்மான், தேவா படங்களிலும் பாடியுள்ளார். 1990களில் தமிழ், மலையாளம் படங்களில் பாடின மின்மினி பின்னர் குரல் இழப்பினால் பாடாமல் இருந்தார். பின்னர் 2015இல் மீண்டும் வந்து அமலா பாலின் படத்தில் பாடினார். கேரளத்தில் தனியார் தொலைக்காட்சியில் மின்மினி கூறியதாவது: 

நான் 1991-1994 வரைதான் பாடினேன். சின்ன சின்ன ஆசை பாடல் பாடிய பிறகு எனக்கு வாய்ப்புகள் குறைந்தது. இதற்கு முன்னமே நான் தேவா, வித்யாசாகர், கீரவாணி படங்களில் பாடியுள்ளேன். அது ராஜா சாருக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. ஆனால் ரஹ்மான் படத்தில் பாடியதும் இது நடந்தது. 

ஒருநாள் நானும் பாடகர் மனோவும் பாடல் பாட ஏவிஎம்மில் தயாரக இருந்தோம். அபோது வந்த ரஜா சார் எனக்கு சின்ன சின்ன பிழைகளை திருத்தம் சொல்லிவிட்டு போனார். பின்னர் மீண்டும் வந்த ராஜா சார், ‘ஏன் எல்லா இடங்களில் சென்று பாடுகிறாய்? இங்கு மட்டுமே பாடுவது போதாதா?’ எனக் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அங்கேயே அழுது விட்டேன்.  பின்னர் மனோ அண்ணன் என்னை சமாதானம் செய்தார்.  அதன்பிறகு ராஜா சார் என்னை பாட அழைக்கவே இல்லை. என் மீது ராஜா சார் ப்ரியமாக இருந்தார். இதுநாள் வரை சொல்லாததைற்கு காரணம் ராஜா சாரை யாரும் தவறாக எண்ணி விடக்கூடாதென நினைத்தேன். இப்போதுகூட கேட்டதால் கூறினேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com