
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் எமா்ஜென்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பி பரப்பினை கிளப்பினார்.
இதையும் படிக்க: தேவர் மகன் சர்ச்சை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம்!
முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா் கங்கனா ரணாவத்.
இதையும் படிக்க: காதலின் மொழி மாறிவிட்டது; அதைதான் சினிமா பிரதிபலிக்கிறது: கஜோல்
இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விடியோவினை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், “மக்களை காப்பவரா அல்லது சர்வாதிகாரியா? நமது நாட்டின் தலைவர் மக்களின்மீது போரை அறிவித்த போது இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை பார்வையிடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
எமா்ஜென்சி திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமென கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.