பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார்.
தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்து அவர் செய்த புரமோஷனை பலரும் விமர்ச்சித்தனர்.
இதையும் படிக்க: தேவர் மகன் சர்ச்சை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம்!
காதலின் மொழி மாறிவிட்டது; அதைதான் சினிமா பிரதிபலிக்கிறது. 1990களில் காதல் என்று நினைத்தவொன்று தற்போது துன்புறுத்தலாகவும் முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. யாரவது 15 கடிதங்கள், 10 முறை வீட்டின் கதவுகளை தட்டினாலும் 30 குறுஞ்செய்திகளை அனுப்பினாலும் ஸ்டாக்கிங் என்பர். அதுதான் தற்போதைய நிலைமை.
தற்போது சினிமாவின் வளர்ச்சி அதிகமாகிவிட்டது. உலக சினிமாக்கள் நமக்கு முன்னே எளிதாக கிடைக்கிறது. முன்னர் ஹிந்திப் படங்களை மட்டுமே பாலிவுட் மக்கள் பார்த்து வந்தார்கள். அதனால் அவர்களது ஒப்பீடு இங்கேயே இருந்தது. ஆனால் இது தற்போது வேலைக்கு ஆகாது. புதியதாக கற்க வேண்டும். மாற வேண்டும். இல்லையெனில் தற்காலத்துக்கு சம்பந்தமில்லாத மனிதராகிவிடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4

சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்







