ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நான் செய்த எடைக் குறைப்பு முறையை யாரும் முயற்சிக்க வேண்டாம்: ரன்தீப் ஹூடா வேண்டுகோள்! 

சாவர்க்கர் படத்திற்காக 4 மாதங்களில் 26 கிலோ எடை குறைப்பை நான் செய்ததுபோல் யாரும் முயற்சிக்க வேண்டாம் என பிரபல ஹிந்தி நடிகர் ரன்தீப் ஹூடா கேட்டுக்கொண்டுள்ளார்.  

News image
Updated On :26 ஜூன் 2023, 6:47 pm IST

சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் திரைப்படத்தில் நடிக்க ரன்தீப் ஹூடா உடல் எடையை குறைத்தது இணையத்தில் வைரலானது. 

இந்தப் படத்தினை எழுதி இயக்கி நடித்துள்ளார் ரன்தீப் ஹூடா. அமித் ச்சியால், அன்கிதா லோஹண்டே நடித்துள்ளார்கள். சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தாண்டிலே படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தப் படத்தில் உடை எடையை குறைத்தது எப்படியென நடிகர் ரன்தீப் ஹூடா கூறியதாவது: 

எனது தங்கை, அஞ்சலி சங்வான்தான் படம் முழுவதும் எனது உடல் எடை மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பாடாமல் பாதுகாத்து இதனை செய்து முடிப்பது கடினமான செயல். இது மிகவும் நீண்ட தொல்லையான செயலாக இருந்தது.  நான் ஒருமுறை குதிரையில் இருந்து விழுந்ததில் முட்டி அடிபட்டுவிட்டது. நான் 4 மாதமும் பேரீட்சை பழமும், பாலும் மட்டுமே சாப்பிட்டு 26 கிலோ எடையை குறத்தேன். இதை ஊடகத்திற்கு தெரியப்படுத்தியது எனது பொறுப்பற்ற செயலாக பார்க்கிறேன். யாரும் இதை செய்ய வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். நிபுணர்கள் உதவியின்றி இதை யாரும் செய்யவேண்டாம். 

சாவர்க்கர் மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். படத்திறகாக அவரைப் பற்றி ஆராய்கையில் நிறைய கற்றுக் கொண்டேன். அவரது 140வது பிறந்தநாளில் படத்தின் முனோட்ட காட்சிகளை வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.