விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.
இவர், விடுதலை முதல் பாகம் வெற்றி பெற்றதையடுத்து, விடுதலை 2 படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், வடசென்னை இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வரும். அதற்கு முன் இரண்டு ஒப்பந்தங்கள் உள்ளது. அதை முடித்துவிட்டு வடசென்னை 2 இயக்குவேன் எனத் தெரிவித்தார்.
மேலும், சர்க்கரையை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிட வேண்டும். விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளேன். அதற்காக அவருடன் பேசி வருகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


