ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாகுபலி 2-ஐ பின்னுக்கு தள்ளிய பதான்!

ஷாருக்கானின் பதான் திரைப்படம் தற்போது மேலும் சாதனையை தனதாக்கியுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2023, 2:17 pm

DIN

ஷாருக்கானின் பதான் திரைப்படம் தற்போது மேலும் சாதனையை தனதாக்கியுள்ளது.

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 

பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை அளித்துள்ளனர். ஏற்கெனவே இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலித்து சாதனைப் படைதிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் பதான் திரைப்படம் தற்போது மேலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இத்திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.526 கோடி வசூலித்து, அதிக வசூலை பெற்ற பாலிவுட் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் ரூ.510 கோடி வசூலித்து இந்த சாதனையை தக்க வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.