மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கயல் தொடர் சகோதரிகளின் உழைப்பைப் பாராட்டும் ரசிகர்கள்!

கயலுக்கு தங்கையாக நடித்துவருபவர் நடிகை அக்ஷிதா அசோக். இவர் சைத்ரா ரெட்டியுடன் மிகுந்த நெருக்கம் கொண்டவர்.

News image
Updated On :21 மார்ச் 2023, 6:55 am

DIN

'கயல்' தொடரில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் உடற்பயிற்சி நிலையத்தில் இருக்கும் விடியோவை பகிர்ந்துள்ளனர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் 'கயல்' தொடர் மக்கள் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் சைத்ரா ரெட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்தவர். 

தந்தையை இழந்த இளம்பெண், தனியொருவளாக இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி தம்பி, தங்கைகளை உருவாக்க சந்திக்கும் சவால்களையும் இன்னல்களையும் அடிப்படையாக வைத்து 'கயல்' தொடர் நகர்கிறது. 

இந்தத் தொடர் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பி. செல்வம் 'கயல்' தொடரை இயக்குகிறார். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், காயத்ரி ஜெயராமன் உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில், இந்தத் தொடரில் கயலுக்கு தங்கையாக நடித்துவருபவர் நடிகை அக்‌ஷிதா அசோக். இவர் சைத்ரா ரெட்டியுடன் மிகுந்த நெருக்கம் கொண்டவர். அடிக்கடி இவர்கள் இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிடும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். 

Story image

அந்தவகையில் சமீபத்தில் உடற்பயிற்சி நிலையத்தில் இருவரும் தீவிரமாக பயிற்சி செய்யும் விடியோவை சைத்ராவும், அக்‌ஷிதாவும் பகிர்ந்துள்ளனர். இவர்களின் இந்த இஸ்டாகிராம் ஸ்டோரியை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.