‘குடும்பங்கள் கொண்டாடும் படமாக...’- சாகுந்தலம் படம் பார்த்து நடிகை சமந்தா நெகிழ்ச்சி! 

‘குடும்பங்கள் கொண்டாடும் படமாக...’- சாகுந்தலம் படம் பார்த்து நடிகை சமந்தா நெகிழ்ச்சி! 

நடிகை சமந்தா சாகுந்தலம் படத்தினை பார்த்த பின்பு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 
Published on

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாகுந்தலம். இப்படத்தின் டிரைலர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியானது.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றுள்ளார்.

மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர். 

மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா - துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாபாத்திரத்தை அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார். தில்ராஜூ தயாரித்துள்ளார். 

கடந்தாண்டு நவம்பரில் வெளியாக வேண்டிய படம் பலமுறை தள்ளிப் போனது. இந்நிலையில் சமந்தா படத்தினைப் பார்த்து இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: 

கடைசியாக இன்றுதான் சாகுந்தலம் படத்தினை பார்த்தேன். குணசேகரன் சார் நீங்கள் எனது இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன அழகான படம். நமது பாரம்பரியத்தின் மிகப்பெரிய காவியத்தை அன்புடன் எடுத்துள்ளீர்கள். குடும்பமாக இந்தப் படத்தினை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். குழந்தைகளே உங்கள் அனைவருக்கும் ரசிக்கும்படியான மாயாஜாலமான உலகம் இதிலுள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்காக தில் ராஜூ , நீலிமா இருவருக்கும் நன்றி. சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com