
இந்தியன் 2 திரைப்படத்தின் மீது இயக்குநர் ஷங்கர் பெரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: ஆக்ஷன் கதைகளில் கவனம் செலுத்தும் தனுஷ்!
இப்படத்தின் சமீப படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இனி கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இப்படம் தன் சினிமா வாழ்வில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.