
வாடிவாசல் திரைப்படத்தின் பணிகளுக்காக இயக்குநர் வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா, சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: இந்தியன் 2 - மிகுந்த நம்பிக்கையில் ஷங்கர்!
இந்நிலையில், ‘வாடிவாசல்’ படத்தில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு காட்சிகளுக்கான விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பவாதிகளைச் சந்திக்க இயக்குநர் வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...