புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாமன்னன் - கவனம் ஈர்க்கும் வடிவேலு தோற்றம்!

மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் தோற்றப் புகைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :10 மே 2023, 8:44 am

DIN

மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் தோற்றப் புகைப்படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ்  நிறுவனம் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  

Story image

இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் வடிவேலு மற்றும் உதயநிதி ஆகியோரின் தோற்றப் படங்களை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் அரசியல்வாதி தோற்றத்திலிருக்கும் வடிவேலுவின் புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.