கஸ்டடி படத்தின் மிரள வைக்கும் புதிய மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் கஸ்டடி. இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அரவிந்தசாமி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: ட்விட்டருக்கு புதிய சிஇஓவை நியமித்தார் எலான் மஸ்க்
இந்த நிலையில், நாக சைதன்யா மற்றும் க்ரீத்தி ஷெட்டி இருவரும் நீருக்கு அடியில் மூழ்கியபடி நடிக்கும் மிரளவைக்கும் காட்சியின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










