ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தளபதி 68: வெங்கட் பிரபு இயக்குகிறாரா? 

நடிகர் விஜய்யின் 68வது படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :15 மே 2023, 6:41 pm IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சுமரான படங்கள்கூட நல்ல வசூல் ஈட்டியுள்ளது. தற்போது அவரது 67வது படமான ‘லியோ’ படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்திற்கு அடுத்து தளபதி 68 படத்தினை இயக்கப்போவது யாரென ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்தப் படத்தினை பிரபல தெலுங்கு இயக்குநர் வீரசிம்ஹ ரெட்டி படத்தின் இயக்குநர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஏற்கனவே இந்தப் படத்தினை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கார்த்திக் சுப்பராஜ் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அட்லி, கோபிசந்த் மலினேனி, கார்த்திக் சுப்புராஜ் இந்த போட்டியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் படத்தினை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக நடிகர் ஜீவா தயாரிப்பார் எனவும் இது அவர்களது தயாரிப்பில் 100வது படமாக இருக்குமெனவும் அவர் மேடையில் பேசிய சில காணொளிகள் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் இந்த வரிசையில் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இசையமைக்க வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ட்விட்டரில் ‘தளபதி 68’ ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.