
கோப்புப்படம்
நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு(71), சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்