தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்தியன் - 2 படப்பிடிப்புக்கு தயாராகும் கமல்!

இந்தியன் - 2 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விஜயவாடாவில் துவங்க உள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2023, 5:51 am

DIN

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே, படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும், இந்தியன் - 2  அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விஜயவாடாவில் விரைவில் துவங்க உள்ளது. இதில், நடிகர் கமல்ஹாசனுக்கான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மேலும், இப்படத்தைத் தொடர்ந்து இந்தியன் - 3 பாகத்திற்கான காட்சியையும் ஷங்கர் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.