மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு. 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கரோனா காரணமாக படப்பிடிப்பு எப்படியெல்லாம் தள்ளிப்போனது குறித்து நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!
கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வருகிற 2024, ஏப்ரல் 10 ஆம் தேதி உலகளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

