நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் மார்க் ஆண்டனி!

மார்க் ஆண்டனி படத்தின் வசூல் நிலவரம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 அக்டோபர் 2023, 7:41 am

DIN

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி இதுவரை உலகளவில் ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி ரூ.100 கோடியை வசூலித்துவிட்டதா? என ரசிகர் ஒருவர எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பினார். இதைக் கண்ட தயாரிப்பாளர் வினோத் ’இன்னும் சில நாள்களில்..’ என பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.